சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி; 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு


சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி; 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Sep 2019 11:25 PM GMT (Updated: 24 Sep 2019 11:25 PM GMT)

மராட்டிய சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. நேற்று அந்த கட்சி 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது.

மும்பை,

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மராட்டிய சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் அந்த கட்சி 50 தொகுதிகளில் மட்டும் களம் இறங்குகிறது.

கட்சியின் தேர்தல் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும், வேட்பாளர்களை தேர்வு செய்யவும் 11 உறுப்பினர்களை கொண்ட குழுவை அமைத்தது.

இந்தநிலையில், ஆம் ஆத்மி கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் மும்பையில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அடங்குவார்கள்.

இவர்களில் ஜோகேஸ்வரி கிழக்கு தொகுதியில் மனித உரிமைகள் ஆர்வலர் வித்தல் லாட், சாந்திவிலி தொகுதியில் தொழில் அதிபர் சிராஜ்கான், தின்தோஷியில் முன்னாள் தொழிற்சங்கவாதி திலிப் தாவ்டேவும் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Next Story