சட்டசபை தேர்தல் : தொகுதி பங்கீடு குறித்து முதல்-மந்திரி பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே அறிவிப்பார்கள்; பா.ஜனதா மாநில தலைவர் தகவல்


சட்டசபை தேர்தல் : தொகுதி பங்கீடு குறித்து முதல்-மந்திரி பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே அறிவிப்பார்கள்; பா.ஜனதா மாநில தலைவர் தகவல்
x
தினத்தந்தி 25 Sept 2019 5:14 AM IST (Updated: 25 Sept 2019 5:14 AM IST)
t-max-icont-min-icon

தொகுதி பங்கீடு குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவிப்பார்கள் என பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் அடுத்த மாதம்(அக்டோபர்) 21-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

இதில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. ஆனால் பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இதுகுறித்து பா.ஜனதா மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறிய தாவது:-

கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளது. முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும், உத்தவ் தாக்கரேவும் பேசி இறுதி முடிவு எடுப்பார்கள். தொகுதி பங்கீடு குறித்து அவர்கள் தான் அறிவிப்பார்கள். அவர்கள் தொகுதி பங்கீடு குறித்து பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கூட்டணி பேச்சு வார்த்தை குறித்து நான் கருத்து கூற முடியாது. நான் குறி சொல்பவன் கிடையாது. கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்பதை மட்டுமே என்னால் கூற முடியும். கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்த பிறகு நாராயண் ரானேயை கட்சியில் சேர்ப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story