திருச்செந்தூரில் பிறந்த நாள் விழா: பா.சிவந்தி ஆதித்தனார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்செந்தூர்,
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வரவேற்று பேசினார். டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் சாதனைகள் குறித்து உதவி பேராசிரியை லெனின் மார்க்சியா பேசினார்.
விழாவில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன், கல்வி நிறுவன செயலாளர் ஜெயக்குமார், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பெவின்சன் பேரின்பராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி, சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முத்தையாராஜ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் உருவச்சிலைக்கு காயாமொழி ஊர் மக்கள் சார்பில், ஊர் தலைவரும், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், முப்புராதி அம்மன் கோவில் அக்தார் வரதராஜ ஆதித்தன், காயாமொழி கூட்டுறவு சங்க தலைவர் தங்கேச ஆதித்தன், செயலாளர் மெய்கண்டமுத்து உள்ளிட்டவர்களும்,
இந்து முன்னணி சார்பில் மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், நகர பொதுச்செயலாளர் முத்துராஜ், நகர துணை தலைவர் மாயாண்டி, செயலாளர் ராஜ், பொருளாளர் மணி உள்ளிட்டவர்களும்,
பா.ஜ.க. சார்பில் மாநில வர்த்தக அணி தலைவர் ராஜகண்ணன், ஒன்றிய விவசாய அணி தலைவர் பாஸ்கர், துணை தலைவர் பாலாஜி உள்ளிட்டவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் உருவச்சிலைக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார், மாவட்ட செயலாளர் பாலமுருகன், வட்டார நாடார் வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வகுமார், துணை தலைவர்கள் ராமேசுவரன், அழகேசன், துணை செயலாளர் சத்தியசீலன், நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், கோடீசுவரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சமத்துவ மக்கள் கழக ஒன்றிய செயலாளர் ஜெயமுருகன், அவை தலைவர் மணிவேல், பொருளாளர் சுப்பிரமணி, வர்த்தக அணி செயலாளர் முத்துகுமார், மாணவர் அணி செயலாளர் மதன்குமார், கிளை செயலாளர் நவீன்குமார் உள்ளிட்டவர்களும், பனங்காட்டு மக்கள் கழகம் சார்பில், மாவட்ட தலைவர்கள் ஓடை செல்வம் (தெற்கு), அற்புதராஜ் (வடக்கு), மாநில வக்கீல் அணி பொறுப்பாளர் சிலுவை நாடார், பிரபு, விஜய், ஜேசு, முருகன் உள்ளிட்டவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் உருவச்சிலைக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அர்ச்சகர்கள் சார்பில், செல்லப்பா அய்யர், விசுவநாத அய்யர் ஆகியோர் வெற்றிவேர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த ஊரான காயாமொழியில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் ஜெயராஜ், காயாமொழி செயலாளர் மொகுதும், பொருளாளர் ராஜேந்திர ஆதித்தன், பகவதி ஆதித்தன், குமரன் ஆதித்தன், தங்கேச ஆதித்தன், ஜெயேந்திர ஆதித்தன், கணேசன், பட்டாணி, கண்ணன், ஷேக் முகைதீன், வேலவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் சன்னதி தெருவில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்துக்கு வக்கீல் சந்திரசேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பூமணி சுவாமி லலிதா பூமணி அம்மையார் அறக்கட்டளை தலைவர் சண்முகவேல், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி, கந்தசாமி, பாலகுமார், ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story