வானவில் : ஸ்மார்ட் இண்டோர் கேமரா
ஹீரோ எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கியூபோ ஸ்மார்ட் இண்டோர் கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
இருசக்கர வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஹீரோ குழுமத்தின் அங்கமான ஹீரோ எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வீட்டு உபயோகப் பொருட்கள் குறிப்பாக ஸ்மார்ட் சாதனங்களை தயாரித்து அறிமுகம் செய்கிறது. அந்த வகையில் இந்நிறுவனம் கியூபோ ஸ்மார்ட் இண்டோர் கேமராவை அறிமுகம் செய்துள்ளது. இது செயற்கை தொழில்நுட்பத்தில் செயல்படக் கூடியது. இன்டோர் கேமராவுடன் கியூபோ ஸ்மார்ட் கேஸ் சென்சார், கியூபோ ஸ்மார்ட் ஸ்மோக் சென்சார் உள்ளிட்டவைகளை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. இதில் கியூபோ ஸ்மார்ட் இண்டோர் கேமராவின் விலை சுமார் ரூ.13,490 ஆகும். ஸ்மார்ட் சென்சார்களின் விலை சுமார் ரூ.3 ஆயிரமாகும்.
இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் கேமரா 140 டிகிரி சுழலும் தன்மை கொண்டது. நைட்விஷன் திறன் உள்ளதால், இரவிலும் இது சிறப்பாக செயல்படும். இதில் உள்ள ஏ.ஐ. தொழில்நுட்பம் காரணமாக மனித உருவங்களை அடையாளம் காணும். முக அடையாளத்தை கண்டுணரும். குழந்தை அழுவதை கேட்டு எச்சரிக்கை செய்யும். இதில் குவால்காம் சிப் உள்ளது. அத்துடன் அமேசான் அலெக்சா உள்ளடாக இடம்பெற்றுள்ளது.
இதனால் குரல் வழி உத்தரவு மூலம் இதை செயல்படுத்தலாம். செய்தி, இசை, வானிலை மற்றும் நினைவூட்டல் உள்ளிட்ட செயல்பாடுகளை குரல் மூலமே நிறைவேற்ற முடியும். சமையலறையில் எரிவாயு கசிவு ஏற்பட்டால் அது குறித்து உணர்த்தும் கேஸ் சென்சாரும், வீட்டில் ஏதேனும் ஒரு பகுதியில் புகை சூழ்ந்தால் அதுகுறித்து எச்சரிக்கும் கியூபோ ஸ்மார்ட் ஸ்மோக் சென்சாரும் கொண்டது.
Related Tags :
Next Story