ஸ்ரீவில்லிபுத்தூர்-பார்த்திபனூர் சாலையை தரம் உயர்த்துவது எப்போது? தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூர்-பார்த்திபனூர் இடையேயான நெடுஞ்சாலையை தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பார்த்திபனூர் வரையிலான 105 கி.மீ. நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்படுவதாகவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் திடீரென இந்த சாலையை தரம் உயர்த்தப்படும் திட்டம் கைவிடப்பட்டு விட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. இந்த சாலையை மாநில நெடுஞ்சாலை துறைதான் தரம் உயர்த்த வேண்டும் என்றும் தெரிவித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்-பார்த்திபனூர் இடையேயான நெடுஞ்சாலை விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இடையே வாகன போக்குவரத்திற்கு மிகவும் அத்தியாவசியமான சாலையாகும். இந்த சாலை தரம் உயர்த்தப்பட்டால் விருதுநகரில் இருந்து ராமநாதபுரத்திற்கு செல்லும் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வாகன போக்குவரத்திற்கு வசதியாக இருக்கும். இந்த சாலையை தரம் உயர்த்த வேண்டும் என நீண்டநாட்களாக விருதுநகர் மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்துவிட்டு பின்னர் இந்த முடிவில் இருந்து பின் வாங்கியதால் மாவட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எது எப்படியாயினும் இந்த சாலையை தரம் உயர்ந்த வேண்டியது அவசியம் ஆகும்.
எனவே மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம், இந்த சாலையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இச்சாலையை தரம் உயர்த்துவதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்வதற்கு வசதியாக இருப்பதோடு இந்த சாலையின் இடையில் உள்ள கிராமங்களில் பொருளாதாரம் மேம்படவும் வாய்ப்பு ஏற்படும்.
எனவே மேலும் தாமதிக்காமல் இந்த சாலையை தரம் உயர்த்த மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story