போரூர் ஏரி அருகே வேன் மீது கார் மோதல்: முதியவர் பலி; ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அழைத்து சென்றபோது பரிதாபம்
போரூர் ஏரி அருகே வேன் மீது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அழைத்துச்சென்றபோது விபத்தில் சிக்கி பலியாகிவிட்டார்.
பூந்தமல்லி,
புதுக்கோட்டையை சேர்ந்தவர் தர்மலிங்கம்(வயது 88). இவர், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை முடிந்து நேற்று காலை அவரை காரில் அவரது குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்கு அழைத்துச்சென்றனர்.
காரின் முன் இருக்கையில் தர்மலிங்கம் அமர்ந்து இருந்தார். தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் ஏரி அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற வேனை, அதன் டிரைவர் திடீரென இடதுபுறமாக சாலையின் ஓரம் நிறுத்த திருப்பினார்.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், வேனின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரின் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த தர்மலிங்கம், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான தர்மலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வேன் டிரைவர் குருமூர்த்தி(29) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அழைத்துச்சென்றபோது விபத்தில் சிக்கி முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை விருகம்பாக்கம், பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கதிரேசன். இவருடைய மனைவி மீனா (50). இவர், வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பஸ்சில் வீட்டுக்கு செல்வதற்காக வடபழனி பஸ் நிலையத்துக்கு நடந்து வந்தார். அப்போது வடபழனி பஸ் பணிமனைக்கு சென்ற அரசு பஸ் ஒன்று அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மீனா, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story