வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் கலெக்டர் பேட்டி


வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 26 Sept 2019 4:30 AM IST (Updated: 26 Sept 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று புதிதாக பதிவியேற்ற கலெக்டர் பிரவீன் பி.நாயர் கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட புதிய கலெக்டராக பிரவீன் பி.நாயர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

நாகை மாவட்டம் மீன்பிடி தொழில், வேளாண்மை மற்றும் உப்பு உற்பத்தி ஆகியவற்றை முதன்மை தொழிலாக கொண்டதாகும். கடலோர மாவட்டமான நாகை மாவட்டத்தில், எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி இருப்பதால், அதற்கு தேவையான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

அடிப்படை பிரச்சினைகளில் கவனம்

மேலும் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தேவைகள் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story