சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை - திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு
குன்னத்தூர் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே வெள்ளிரவெளி வடுகபாளையத்தை சேர்ந்தவர் மினியன்(வயது 60). விவசாயி.
இவர் 5 வயது மற்றும் 4 வயது சிறுமிகள் 2 பேரை வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமிகள் தனது பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினியனை கடந்த 5-12-2018 அன்று கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஜெயந்தி நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்துக்கு, மினியனுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் என மொத்தம் 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் சிறப்பு அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story