தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனைக்கு உரிமம் பெற கால அவகாசம் - கலெக்டர் ஷில்பா தகவல்


தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனைக்கு உரிமம் பெற கால அவகாசம் - கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 26 Sept 2019 4:15 AM IST (Updated: 26 Sept 2019 4:49 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனை செய்வதற்கு உரிமம் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை,

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடிய கடைக்காரர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு 30 நாட்களுக்கு முன் தற்காலிக உரிமம் வழங்கிட விண்ணப்பங்களை இணையதளம் வழியாக சமர்ப்பிக்க அரசாணை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினரால் வெளியிடப்பட்டு இருந்தது. 2019-ம் ஆண்டிற்கான தீபாவளிக்கு பட்டாசு விற்பனை செய்திட விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக 31.8.2019 வரை பெறப்பட்டது.

தற்போது பட்டாசு விற்பனைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்து விட்ட நிலையில் வணிகர்கள், விற்பனையாளர்கள் தங்களுக்கு கூடுதல் கால அவகாசம் தரவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று அவர்களின் நலன்கருதி இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்ய நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை கால நீட்டிப்பு செய்து சென்னை கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் நிர்வாக ஆணையரால் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கால நீடிப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வணிகர்கள், விற்பனையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story