கடல் கொந்தளிப்பால் அரிச்சல்முனையில் தண்ணீர் சூழ்ந்தது - புதிய மணல் திட்டு உருவானது


கடல் கொந்தளிப்பால் அரிச்சல்முனையில் தண்ணீர் சூழ்ந்தது - புதிய மணல் திட்டு உருவானது
x
தினத்தந்தி 27 Sept 2019 4:15 AM IST (Updated: 26 Sept 2019 10:57 PM IST)
t-max-icont-min-icon

தனு‌‌ஷ்கோடியில் கடல் கொந்தளிப்பால் அரிச்சல்முனை பகுதி முழுவதும் கடல் நீர் சூழ்ந்தது. நடுக்கடலில் புதிதாக மணல் திட்டு உருவானது.

ராமேசுவரம், 

ராமேசுவரத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் புயலால் அழிந்து போன தனு‌‌ஷ்கோடி கடல் பகுதி உள்ளது. தனு‌‌ஷ்கோடி கடல் பகுதியானது இயல்பாகவே கொந்தளிப்பாகவே காணப்படும். இதனால் பாதுகாப்பு கருதி தனு‌‌ஷ்கோடி கடலில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனு‌‌ஷ்கோடி பகுதியில் நேற்று காலை முதலே வழக்கத்தை காட்டிலும் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது.

குறிப்பாக அரிச்சல்முனை தென் கடல் பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்ததால் கடல் நீரானது தென் பகுதியில் இருந்து வடக்கு கடலில் சேரும் அளவிற்கு கடல் சீற்றம் வேகமாக இருந்தது. இதன்காரணமாக மணல் பரப்பாக காணப்பட்ட அரிச்சல்முனை கடற்கரை பகுதி முழுவதும் நேற்று கடல் நீரால் சூழ்ந்தது.

தனு‌‌ஷ்கோடியில் தென் கடல் பகுதி அதிக கொந்தளிப்புடன் இருந்த நிலையில் வடக்கு கடலானது அலைகளே இல்லாமல் அமைதியாக காணப்பட்டது. இத்துடன் வடக்கு பகுதியின் நடுக்கடலில் புதிதாக ஒரு மணல் திட்டு ஒன்றும் உருவாகியிருந்தது. ஒருபுறம் கடல் கொந்தளிப்பு, மறுபுறம் கடல் அமைதி என இரண்டு விதமாக காட்சியத்த கடலை நேற்று தனு‌‌ஷ்கோடி வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

மேலும் கடல் கொந்தளிப்பு காரணமாக அரிச்சல்முனை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சுற்றுலா பயணிகள் கடலில் இறங்காதவாறு எச்சரிக்கை செய்தபடி இருந்தனர். 

Next Story