மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகப்பட்டு 6 குழந்தைகளின் தாய் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை - வாலாஜா அருகே பயங்கரம் + "||" + Suspected of behavior Mother of 6 children burnt to death

நடத்தையில் சந்தேகப்பட்டு 6 குழந்தைகளின் தாய் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை - வாலாஜா அருகே பயங்கரம்

நடத்தையில் சந்தேகப்பட்டு 6 குழந்தைகளின் தாய் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை - வாலாஜா அருகே பயங்கரம்
வாலாஜா அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு 6 குழந்தைகளின் தாய் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார்.
வாலாஜா, 

வேலூர் மாவட்டம் வாலாஜாவை அடுத்த தேவதானம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 60). இவர், வாலாஜாவில் கறிக்கடை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி ஈஸ்வரி (47). இவர்களுக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில் முத்துவிற்கு, ஈஸ்வரியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 24-ந் தேதி நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முத்து, தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை பாட்டிலில் பிடித்து வந்து ஈஸ்வரி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் தீக்காயம் அடைந்த ஈஸ்வரி சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதுபோல் தீக்காயம் அடைந்த முத்துவும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். அவர், இறக்கும் முன்பு தன் கணவர் முத்து தான் என் இறப்புக்கு காரணம் என்று மரண வாக்குமூலம் கொடுத்திருந்தார். இதனால் கொலை முயற்சி வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. நடத்தையில் சந்தேகம்: சகோதரியை கொன்று உடலை எரித்த 3 பேர் கைது - மேலும் ஒரு சகோதரனுக்கு வலைவீச்சு
சகோதரியை கொடூரமாக கொலை செய்த 3 சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
2. நடத்தையில் சந்தேகப்பட்டு கட்டையால் தாக்கி பெண் கொலை: தொழிலாளி கைது
நடத்தையில் சந்தேகப்பட்டு கட்டையால் தாக்கி பெண்ணை கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
3. நடத்தையில் சந்தேகம்: மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த தொழிலாளி - போலீசில் சரண் அடைந்தார்
கும்மிடிப்பூண்டி அருகே மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் நள்ளிரவில் தூங்கும்போது மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்த கணவர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.