தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 23 மனுக்களுக்கு உடனடி தீர்வு


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 23 மனுக்களுக்கு உடனடி தீர்வு
x
தினத்தந்தி 26 Sep 2019 10:30 PM GMT (Updated: 26 Sep 2019 8:27 PM GMT)

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 23 மனுக்களுக்கு உடனடி தீர்வு.

பெரம்பலூர்,

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் கீழ் தகவல் கோரி பெறப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை மாநில தகவல் உரிமை ஆணையர் முத்துராஜ் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் தகவல் கோரி பெறப்பட்டிருந்த 11 மேல்முறையீட்டு மனுக்கள் மீதும், அரியலூர் மாவட்டத்திலிருந்து பெறப்பட்ட 12 மேல்முறையீட்டு மனுக்கள் மீதும் என மொத்தம் 23 மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காணப்பட்டது.

இவ்விசாரணையில் மேல்முறையீட்டு மனு அளித்திருந்த மனுதாரர்களும், நகராட்சி அலுவலகம், கல்வித்துறையை சேர்ந்த பொது தகவல் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story