மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
வேலாயுதம்பாளையம்,
தேனிமாவட்டம், அல்லிநகரை சேர்ந்தவர் தினகரன். இவரது மகன் அஜீத் (வயது 27). இவர் கரூர் மாவட்டம், தளவாபாளையத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து இறுதியாண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று கல்லூரி பாடம் சம்பந்தமான செயல்முறை பயிற்சி பெறுவதற்காக கல்லூரியில் இருந்து மேல்ஓரத்தை என்ற கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஒரு வளைவில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி அஜீத் கீழே விழுந்து படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
சாவு
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் ஆம்புலன்சு மூலம் அஜீத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜீத் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தோட்டக்குறிச்சி கிராமநிர்வாக அலுவலர் பிரேமா வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் அஜீத் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலை பார்த்து சக கல்லூரி மாணவ-மாணவிகள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

Related Tags :
Next Story