நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கால்நாட்டு நிகழ்ச்சி
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நெல்லை,
நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி திருக்கல்யாண விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் ஐப்பசி திருக்கல்யாண விழா நடைபெற இருக்கிறது.
இதற்கான பந்தல்கால் நாட்டு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. காந்திமதி அம்பாள், விநாயகர் ஆகியோருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்பாள் சன்னதி நுழைவு வாசல் பகுதியில் பந்தல்கால் நடப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக வருகிற 15-ந்தேதி விழா கொடியேற்றம் நடக்கிறது. 25-ந்தேதி டவுன் காட்சி மண்டபத்தில் அம்பாளுக்கு, சுவாமி காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகி றது. தொடர்ந்து 26-ந்தேதி அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி -அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நாராயணன் மற்றும் ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Related Tags :
Next Story