கோவில்பட்டியில் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ரவுடியிடம் உதவி கலெக்டர் விசாரணை போலீசார் மீது உறவினர்கள் பரபரப்பு புகார்
கோவில்பட்டியில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ரவுடியிடம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார். மேலும் போலீசார் மீது உறவினர்கள் பரபரப்பு புகார் தெரிவித்தனர்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி போஸ் நகரைச் சேர்ந்தவர் மாணிக்கராஜா (வயது 39). பிரபல ரவுடியான இவர் மீது கோவில்பட்டி கிழக்கு, மேற்கு உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவருக்கு சொந்தமான தோட்டம், கோவில்பட்டி குருமலை கார்த்திகைபட்டியில் உள்ளது. அங்கு ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக, கோவில்பட்டி கிழக்கு போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. உடனே தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது தோட்டத்தில் பதுங்கி இருந்த மாணிக்கராஜா அரிவாளால் போலீசாரை வெட்டி விட்டு தப்ப முயன்றார். உடனே சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா தனது துப்பாக்கியால் மாணிக்கராஜாவின் வலது காலில் சுட்டு, அவரை பிடித்து கைது செய்தார்.
இதில் படுகாயம் அடைந்த மாணிக்கராஜாவுக்கு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரிவாள் வெட்டில் காயம் அடைந்த போலீஸ்காரர்கள் செல்வகுமார், முகம்மது மைதீனுக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மாணிக்கராஜாவின் மனைவி கிருஷ்ணவேணி (22) தன்னுடைய மகள் பவதாரணி (3), மகன் கவித்தேவன் (2) மற்றும் உறவினர்களுடன் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் போலீசார் மீது பரபரப்பு புகார் தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து கிருஷ்ணவேணி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சூரியகலாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அந்த மனுவில், எனது கணவர் மாணிக்கராஜா மாடுகள் வளர்த்து, பால் வியாபாரம் செய்து வருகிறார். அவர் மீது போலீசார் தொடர்ந்த பொய் வழக்குகளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். எனது மாமியார் சண்முகத்தாய் கடந்த 2016-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டனர். அந்த வழக்கில் சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு வரக்கூடாது என்று என்னுடைய கணவரை போலீசார் மிரட்டினர். இந்த நிலையில் எனது கணவரை போலீசார் விசாரணைக்கு என்று அழைத்து சென்று, அவரது தோட்டத்தில் வைத்து அடித்து உதைத்துள்ளனர். பின்னர் அவரது கண்களை துணியால் கட்டி, காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். எனவே எனது கணவரை தாக்கி, துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும். எங்களது குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா நேற்று மாலையில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாணிக்கராஜாவிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் அவர், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் போலீஸ்காரர்கள் செல்வகுமார், முகம்மது மைதீன் ஆகியோரிடமும் விசாரித்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்புவதாகவும், தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உதவி கலெக்டர் விஜயா தெரிவித்தார்.

Related Tags :
Next Story