அம்மன்புரத்தில் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் அனுசரிப்பு திரளானவர்கள் அஞ்சலி செலுத்தினர்
வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு தினம் அம்மன்புரத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது.
ஆறுமுகநேரி,
அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் மூலக்கரை என்.வெங்கடேஷ் பண்ணையாரின் 16-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அம்மன்புரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் காலையில் பால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வழிபாடு நடந்தது.
தொடர்ந்து வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவிடத்தில் அவரது மனைவியும், முன்னாள் மத்திய மந்திரியுமான ராதிகா செல்வி, மகன் ரக்ஷன் பண்ணையார், வெங்கடேஷ் பண்ணையாரின் சகோதரி ஜானகி, அவருடைய கணவர் மாவடி மகாலிங்கம், மூலக்கரை கோசலை பண்ணையார், துரைப்பாண்டியன் பண்ணையார், ஆத்திக்கண் பண்ணையார், ராதிகா செல்வியின் தாயார் தங்கத்தாய் அம்மாள், சகோதரர் குமரன் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவிடம் அருகில் 108 பெண்கள் பொங்கலிட்டு படைத்து வழிபட்டனர். பழையகாயலைச் சேர்ந்த பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர்.
மூலக்கரையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வெங்கடேஷ் பண்ணையாரின் உருவ படத்தை வைத்து, ஊர் மக்கள் ஊர்வலமாக அம்மன்புரத்துக்கு வந்தனர். மூலக்கரை நுழைவுவாயிலில் அலங்கரிக்கப்பட்ட வெங்கடேஷ் பண்ணையாரின் உருவ படத்துக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
பின்னர் வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவிடத்தில் வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்க மாநில தலைவர் எஸ்.ஏ.சுபாஷ் பண்ணையார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
நற்பணி இயக்க மாநில செயலாளர் சொர்ணவேல் குமார், மாநில துணை தலைவர் சிவ செல்வராஜ், மாநில இணை செயலாளர் சிலுவை நாடார், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஓடை செல்வம், ஈரோடு மாவட்ட தலைவர் ஜான்சன், ஆறுமுகநேரி நகர தலைவர் கிளாட்சன், செயலாளர் தினகர பாண்டியன், பொருளாளர் இசக்கிமுத்து, துணை தலைவர் மகராஜன், சென்னை மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் ஏ.சி.துரை, வக்கீல் ரூபராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் ஆர்.சண்முகவேல், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார், துணை தலைவர் முருகேசன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வி.எஸ்.கணேசன், வி.தங்கவேல் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.விஜயகுமார், பொருளாளர் மெல்வின், சென்னை நாடார் சங்க தலைவர் பி.கரண்சிங், நெல்லை சந்திப்பு காமராஜர் சிலை பராமரிப்பு குழு தலைவர் வித்யா கண்ணன், செயலாளர் சரத்மணி, பொருளாளர் தங்கவேல்,
நாடார் மக்கள் சக்தி இயக்க ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், காமராஜர் ஆதித்தனார் கழக மாநில பொறுப்பாளர் எஸ்.எஸ்.எஸ்.சிங், மாநில பொதுச்செயலாளர் மின்னல் அந்தோணி, பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் கல்பாக்கம் மோகன், மாநில துணை தலைவர் குருசாமி, மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் மைக்கேல் அந்தோணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தி.மு.க. திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், ஆறுமுகநேரி நகர செயலாளர் கல்யாணசுந்தரம், கூட்டுறவு பண்டகசாலை துணை தலைவர் ஏ.கே.பாண்டியன், கானம் முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் செந்தமிழ் சேகர், ஏரல் முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலாளர் காளிதாஸ் பண்ணையார், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் சுதாகர், மாவட்ட விவசாய அணி தலைவர் வேல் ராமகிருஷ்ணன், தொழில் அதிபர்கள் கே.கே.கணேசன், சிற்பி ஸ்ரீதர் உள்பட திரளானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா, மாநில அமைப்பு செயலாளர் ஹென்றி தாமஸ், மாவட்ட செயலாளர்கள் வக்கீல் புவனேசுவரன் (தூத்துக்குடி தெற்கு), பச்சமால் (கன்னியாகுமரி கிழக்கு),
இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத், அனுமன் சேனா மாநில பொதுச்செயலாளர் ரவி கிருஷ்ணன், தெற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல், ஆறுமுகநேரி நகர தலைவர் மந்திரமூர்த்தி, இந்து முன்னணி முன்னாள் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஆதித்தன் உள்ளிட்டவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.
வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மூலக்கரையில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆறுமுகநேரி, தெற்கு ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முழு கடையடைப்பு நடந்தது.
நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார் ஆகியோர் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில், சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெற்கு மாவட்ட தலைவர் காமராசு, ஆத்தூர் சுற்று வட்டார நாடார் சங்க தலைவர் தாமோதரன், துணை தலைவர் எஸ்.கே.ராமநாதன், பொருளாளர் லிங்கராஜ், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சந்தனகுமார், ராஜபாண்டி, ஆறுமுகநேரி ஐக்கிய வியாபாரிகள் சங்க தலைவர் தாமோதரன் உள்ளிட்டவர்கள் மரியாதை செலுத்தினர்.
வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மூலக்கரையில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆறுமுகநேரி, தெற்கு ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முழு கடையடைப்பு நடந்தது.
நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார் ஆகியோர் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில், சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story