மாவட்ட செய்திகள்

பாதை தகராறில் விவசாயியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை; சிவகங்கை கோர்ட்டு உத்தரவு + "||" + person Life sentence For the murderer of the farmer

பாதை தகராறில் விவசாயியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை; சிவகங்கை கோர்ட்டு உத்தரவு

பாதை தகராறில் விவசாயியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை; சிவகங்கை கோர்ட்டு உத்தரவு
பாதை தகராறில் விவசாயியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு உத்தரவிட்டது.
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டையை அடுத்த செம்புலான்வயல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம் விவசாயி (வயது 42). இவருடைய வீட்டின் அருகில் வசிப்பவர் வீரப்பன் (50). இவர்களுக்குள் பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.


இந்தநிலையில் கடந்த 2012–ம் வருடம் மே மாதம் மீண்டும் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த வீரப்பன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜரத்தினத்தை வெட்டி கொலை செய்தார்

இதுதொடர்பாக சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வீரப்பனை கைது செய்து, அவர் மீது சிவகங்கையில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரணை செய்த மாவட்ட செசன்ஸ் நீதிபதி கார்த்திகேயன், குற்றம் சாட்டப்பட்ட வீரப்பனுக்கு ஆயுள்தண்டனையும் ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.