ராஜபாளையம் பகுதியில் பொது இடங்களில் அனுமதியின்றி குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை; நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை


ராஜபாளையம் பகுதியில் பொது இடங்களில் அனுமதியின்றி குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை; நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 27 Sep 2019 11:00 PM GMT (Updated: 27 Sep 2019 4:22 PM GMT)

ராஜபாளையம் நகராட்சி பகுதியில் பொதுஇடங்களில் அனுமதியின்றி குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஆவாரம்பட்டி பழைய நீதிமன்றம் அருகே உள்ள பகுதி பல வருடங்களாக குப்பை, கட்டிட கழிவுகளை கொட்டும் இடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த இடத்தை சுத்தம் செய்து கழிவுகளை அகற்றி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பொதினி அறக்கட்டளையின் பங்களிப்புடன் வேலி அமைத்து மரக்கன்றுகள் நடும் விழா நகராட்சி ஆணையாளர் ஜோதிகுமார் தலைமையில் நடைபெற்றது.

மேலும் அப்பகுதியில் பொறியாளர் நடராஜன், நகரமைப்பு அலுவலர் மதியழகன், சுகாதார ஆய்வாளர்கள் மாரிமுத்து, காளி பழனிச்சாமி, அறக்கட்டளை தலைவர் பெருமாள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் இந்திராணி ஆகியோர் மரக்கன்று நட்டனர்.

அப்போது நகராட்சி ஆணையாளர் ஜோதிகுமார் கூறியதாவது:-

தற்போது சுத்தம் செய்துள்ள இடத்திலோ அல்லது நகராட்சிக்கு உட்பட்ட மக்கள் நடமாடும் பொது இடங்களிலோ குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story