மாவட்ட செய்திகள்

மஞ்சள்பரப்பு - புல்லாவெளி இடையே மலைப்பாதையில் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு + "||" + Mancalparappu - Between pullaveli As the tree slopes down the hill

மஞ்சள்பரப்பு - புல்லாவெளி இடையே மலைப்பாதையில் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

மஞ்சள்பரப்பு - புல்லாவெளி இடையே மலைப்பாதையில் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
மஞ்சள்பரப்பு-புல்லாவெளி இடையே மலைப்பாதையில் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரும்பாறை, 

கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, தடியன்குடிசை, மஞ்சள்பரப்பு, கொங்கப்பட்டி, புல்லாவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அடிக்கடி மரங்கள் சாய்ந்து விழுந்து வருகின்றன.

நேற்றும் பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதில் மஞ்சள்பரப்பு-புல்லாவெளி இடையே இலவமரம் ஒன்று வேரோடு சாய்ந்து மலைப்பாதையில் விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மலைப்பாதையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் மின்கம்பி மீது மரம் சாய்ந்ததால் புல்லாவெளி பகுதிக்கு மின்தடை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜோதிபாஸ் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் எந்திரம் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். அதன்பின்னரே போக்குவரத்து சீரானது.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. லோயர்கேம்ப் - குமுளி இடையே மலைப்பாதையில் ஆபத்தான பாறைகளால் விபத்து அபாயம்
லோயர்கேம்ப்-குமுளி இடையே மலைப்பாதையில், ஆபத்தான பாறைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
2. டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர் மலைப்பாதையில் கர்ப்பிணிக்கு பிரசவம்
ஊசூர் அருகே டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கி வந்த போது மலைப்பாதையில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
3. போடிமெட்டு மலைப்பாதையில் மண் சரிவு - போக்குவரத்து பாதிப்பு
தொடர் மழை காரணமாக போடிமெட்டு மலைப்பாதையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக அந்த சாலையில் 9 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4. கூடலூர்-மலப்புரம் மலைப்பாதையில், கனரக வாகன போக்குவரத்து தொடங்கியது - பொதுமக்கள் மகிழ்ச்சி
கூடலூர்-மலப்புரம் மலைப்பாதையில் கனரக வாகன போக்குவரத்து தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
5. போடிமெட்டு மலைப்பாதையில், 300 அடி பள்ளத்தில் ஜீப் பாய்ந்து பெண்கள் உள்பட 3 பேர் பலி - 20 பேர் படுகாயம்
போடிமெட்டு மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் ஜீப் பாய்ந்ததில் பெண்கள் உள்பட 3 பேர் பலியாகினர். இந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.