மயிலாடுதுறை-பூம்புகார் இடையே ஆபத்தான சாலை வளைவுகளில் அடையாள குறி காட்டும் பலகை வைக்கப்படுமா?


மயிலாடுதுறை-பூம்புகார் இடையே ஆபத்தான சாலை வளைவுகளில் அடையாள குறி காட்டும் பலகை வைக்கப்படுமா?
x
தினத்தந்தி 28 Sept 2019 3:45 AM IST (Updated: 28 Sept 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மற்றும் பூம்புகார் இடையே ஆபத்தான சாலை வளைவுகளில் அடையாள குறி காட்டும் பலகை வைக்கப்படுமா? என்று பொது மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆக்கூர்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் 24 கிலோ மீட்டர் தூரம் உடையதாகும். இந்த சாலையின் வழியாக பூம்புகார் கடற்கரை, பூம்புகார் அரசு கல்லூரி, நவக்கிரக கோவில்களான திருவெண்காடு புதன் கோவில், கீழப்பெரும்பள்ளம் கேது கோவில், இப்பகுதியை சுற்றி ஒரே தொகுப்பாக அமைந்துள்ள 11 திவ்ய தேச பெருமாள் கோவில்கள் மற்றும் பஞ்ச நரசிம்மர் கோவில்கள் உள்ளிட்ட இடங்களுக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.

மேலும் இந்த சாலையை பயன்படுத்தி சீர்காழி, சிதம்பரம், காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி போன்ற ஊர்களுக்கு தினமும் ஏராளமான கார், லாரி, வேன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் 20-க்்கும் மேற்பட்ட ஆபத்தான சாலை வளைவுகள் உள்ளன. இதன் காரணமாக அந்த பகுதிகளில் எதிரே வரும் வாகனம் தெரியாமல் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக கீழையூர் உப்புச்சந்தை மாரியம்மன்கோவில் அருகே உள்ள ஆபத்தான சாலை வளைவில் விபத்துக்களால் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

எனவே மேலும் இதுபோன்ற விபத்துக்கள், உயிர்சேதங்கள் ஏற்படாமல் இருக்க மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் உள்ள ஆபத்தான சாலை வளைவுகளில் அடையாள குறிகாட்டும் பலகை வைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story