வேதாரண்யம் பகுதியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு கருப்பு இறால்களை வளர்க்கும் பண்ணையாளர்கள்; இலவச மின்சாரம் வழங்க கோரிக்கை


வேதாரண்யம் பகுதியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு கருப்பு இறால்களை வளர்க்கும் பண்ணையாளர்கள்; இலவச மின்சாரம் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 28 Sept 2019 4:30 AM IST (Updated: 28 Sept 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் பகுதியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு பண்ணையாளர்கள் கருப்பு இறால்களை வளர்க்க தொடங்கி உள்ளனர். இலவச மின்சாரம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கள்ளிமேடு, தோப்புத்துறை, புஷ்பவனம், தேத்தாகுடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1994-ம் ஆண்டு முதல் இறால் வளர்க் கப்பட்டு வருகிறது. விவசாயத்தை நம்பி உள்ள இப்பகுதி மக்களுக்கு அதிக லாபம் கிடைக்காததால் அன்னிய செலாவனியை அள்ளிதரும் இறால் தொழிலுக்கு மாறி உள்ளனர்.

முதன் முதலாக இப்பகுதியில் டைகர் இறால் என்று அழைக்கபடும் கருப்பு இறால் வளர்க்கப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளாக கருப்பு இறால் வளர்ப்பில் ஈடுபட்டு வந்த இறால் பண்ணையாளர்கள், பல்வேறு ே-்நாய் தாக்குதலின் காரணமாக அதிக அளவில் நஷ்டத்தை சந்தித்தனர். 120 நாட்கள் இறாலை வளர்த்து அதனை விற்பனை செய்யும் போது வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலையை குறைத்து வாங்குகின்றனர். இதனால் இறால் வளர்ப்போருக்கு சரியான விலை கிடைக்காமல் நஷ்டம் அடைகின்றனர்.

2011-ம் ஆண்டு முதல் நோய் தாக்குதலில் இருந்து ஓரளவு பாதுகாக்க கூடிய வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வனாமி இறாலை வளர்க்க தொடங்கினர். 7 ஆண்டுகளுக்கு பிறகு வனாமி இறாலின் வளர்ப்பு வீரியம் குறைந்து நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏராளமான இறால் பண்ணையாளர்கள் நஷ்டம் அடைந்தனர். தற்போது விவசாயிகள் மீண்டும் கருப்பு இறால் வளர்பிற்கே திரும்பி உள்ளனர். அதற்கு காரணம் கடல் பகுதியில் இருந்து பிடிக்கப்படும் தாய் இறாலிருந்து குஞ்சுகள் பொரித்து அந்த குஞ்சுகளை இறால் பண்ணையில் வைத்து வளர்க்கின்றனர். இந்த இறால் குஞ்சுகள் நோய் எதிர்ப்பு சக்தி உடையதாகவும், இங்கு உள்ள தட்ப வெப்பநிலையை தாங்கி வளரக்கூடியதாகவும் உள்ளது.

கருப்பு வனாமி ஒரு கிலோ ரூ.500-க்கும், 40 எண்ணிக்கை கொண்ட இறால் ரூ.430-க்கும், 50 எண்ணிக்கை கொண்ட இறால் ரூ.330-க்கும், 100-ம் அதற்கு மேலும் எண்ணிக்கையில் உள்ள இறால் 225-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. நல்ல விலை கிடைப்பதாலும், நோய் எதிர்ப்பு சக்தி கூடுதலாக உள்ளதாலும் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கறுப்பு இறால் வளர்ப்பிற்கு இறால் பண்ணையாளர்கள் மாறி உள்ளனர்.

இதுகுறித்து இறால் பண்ணை உரிமையாளர்கள் கூறியதாவது:- விவசாயத்திற்கு மாற்று தொழிலாகவும், லாபம் தரும் தொழிலாகவும் உள்ள இந்த இறால் வளர்ப்பு 1994-ம் ஆண்டு இப்பகுதியில் தொடங்கப்பட்டது. 25 ஆண்டுகள் கருப்பு இறால் வளர்பில் ஈடுபட்ட பண்ணையாளர்கள் பல்வேறு காரணங்களால் வனாமின் இறால் வளர்்ப்பிற்கு மாறினர். கடந்த 2000-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் இறால் விலை ரூபாய் 500-க்கு உயர்ந்துள்ளது. அதற்கு காரணம் இறால் உற்பத்தி வெகுவாக குறைந்ததே ஆகும்.

தற்போது வனாமின் இறாலின் வீரியம் குறைந்து கடுமையான நோய் தாக்குதல் ஏற்பட்டு பண்ணையாளர்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. வேதாரண்யம் பகுதியில் இறால் வளர்பிற்கு பயன்படுத்தபடும் தண்ணீரின் தரம் குறைந்து விட்டது. இதன் காரணமாக வனாமி இறால் உற்பத்தி திறன் வெகுவாக குறைந்து உள்ளது. இறால் வளர்ப்பு தொழிலுக்கு ஆந்திராவில் இலவச மின்சாரம், வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.ஆனால் தமிழகத்தில் மின் இணைப்பு கூட இறால் வளர்பிற்கு கொடுக்கப்படுவதில்லை. விவசாயத்தில் நஷ்டத்தை சந்தித்து அதற்கு மாற்று இறால் வளர்ப்பு தொழிலில் ஈடுபடுவோருக்கு இலவச மின்சாரம், வங்கி கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story