மன்னார்குடியில் மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


மன்னார்குடியில் மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Sept 2019 4:15 AM IST (Updated: 28 Sept 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, பள்ளங்கோவில் மின் ஊழியர் குமார் என்பவர் மின் இணைப்பை சரிசெய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். தற்போது அவர் தஞ்சையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் பணியின்போது காயமடைந்த மின் ஊழியருக்கு பள்ளங்கோவில் இளநிலை மின் பொறியாளர் மருத்துவ உதவி கிடைக்க விடாமல் செய்வதாகவும், ஊழியர் விரோத போக்கை கடைபிடிப்பதாகவும் கூறி மின் ஊழியர் மத்திய சங்கம் சார்பில் மின் ஊழியர் மத்திய மன்னார்குடி பூக்கொல்லை ரோட்டில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட தலைவர் சகாயராஜ் தலைமை தாங்கினார். திட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், மன்னார்குடி கோட்ட செயலாளர் வீரபாண்டியன், சி.ஐ.டி.யூ. திருவாரூர் மாவட்ட செயலாளர் முருகையன், துணைத்தலைவர் ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டு இளநிலை மின்பொறியாளரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Next Story