ரேகடஅள்ளியில் ஒகேனக்கல் குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்
ரேகடஅள்ளியில் ஒகேனக்கல் குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொம்மிடி,
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள ரேகடஅள்ளி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த ஒரு வாரமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வினியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் கிராமமக்கள் குடிநீருக்கு சிரமப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை ஒகேனக்கல் குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் ரேகடஅள்ளி பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொம்மிடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒகேனக்கல் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story