முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான தேர்வு: மாவட்டத்தில் 3,362 பேர் எழுதினர் - மின்தடையால் தேர்வர்கள் சாலை மறியல்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான தேர்வை சேலம் மாவட்டத்தில் 3,362 பேர் எழுதினார்கள். மின் தடை ஏற்பட்டதால் தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம்,
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 பணிக்கான தேர்வு நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. நேற்று நடந்த தேர்வை எழுதுவதற்காக சேலம் மாவட்டத்தில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 13 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தேர்வர்கள் காலை 8 மணியில் இருந்தே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். பின்னர் அவர்கள் 8.30 மணி முதல் தேர்வு மைய அறைக்குள் நுழைய அனுமதித்தனர். ஏற்கனவே ஹால் டிக்கெட்டில் தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி பெல்ட், ஷூ, அணிகலன்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் கொண்டு செல்வதற்கு தேர்வர்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்த தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கொண்ட மேற்பார்வை குழு தீவிரமாக கண்காணித்தனர். காலையில் நடந்த இயற்பியல் மற்றும் வரலாறு பாடங்களை சேர்ந்த முதுநிலை ஆசிரியர்கள் 1,674 பேர் கலந்து கொண்டனர். மதியம் நடந்த விலங்கியல், பொருளியல், தாவரவியல், புவி அமைப்பியல், மனையியல், அரசியல்சார் அறிவியல், இந்திய கலாசாரம் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 ஆகிய 8 பாடப்பிரிவுகளை சேர்ந்த முதுநிலை ஆசிரியர்கள் 1,688 பேர் கலந்து கொண்டனர்.
மொத்தம் காலை, மாலையில் நடந்த இந்த தேர்வை 3,362 பேர் எழுதினார்கள். தேர்வு அறையில் பயோ மெட்ரிக் பதிவும், தேர்வர்களின் புகைப்படமும் எடுக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் கல்வி அதிகாரிகள் மற்றும் வீராணம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம், தாமதமான 2 மணி நேரத்தை ஒதுக்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் சர்வர் பிரச்சினை சரிசெய்யப்பட்டு தொடர்ந்து ஆன்லைனில் தேர்வர்கள் தேர்வு எழுதினர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான தேர்வு இன்றும்(சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த தேர்வை மாவட்ட கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே குப்பனூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மையத்தில் 150 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய சிறிது நேரத்திலேயே அங்கு மின்தடை ஏற்பட்டு சர்வர் பழுதானது. இதனால் தேர்வர்கள் மிகவும் அவதியுற்றனர். இதையடுத்து ஆத்திரமடைந்த அவர்கள் சேலம்-அரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் கல்வி அதிகாரிகள் மற்றும் வீராணம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம், தாமதமான 2 மணி நேரத்தை ஒதுக்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் சர்வர் பிரச்சினை சரிசெய்யப்பட்டு தொடர்ந்து ஆன்லைனில் தேர்வர்கள் தேர்வு எழுதினர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான தேர்வு இன்றும்(சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
Related Tags :
Next Story