சேலம் மாவட்டத்தில் இன்று சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்
சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாமில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சேலம் வந்தார். மாவட்ட எல்லையான சங்ககிரியில் அவருக்கு கலெக்டர் ராமன் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். மேலும் போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளும் முதல்-அமைச்சரை வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் நெய்காரப்பட்டியில் உள்ள பொன்னாக்கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறுகிறார். பின்னர் காலை 11 மணிக்கு சங்ககிரி பைபாஸ் சாலையில் உள்ள பி.ஆர்.எம். திருமண மண்டபத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனுக்களை கொடுக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு கொங்கணாபுரம் அருகே உள்ள கச்சுப்பள்ளியில் அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் மற்றும் புதிய வணிக வளாகம் திறப்பு விழா, 137 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவை நடைபெறுகிறது.
இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பூங்கா, உடற்பயிற்சி கூடம், புதிய வணிக வளாகம் ஆகியவற்றை திறந்து வைப்பதுடன், புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மேட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்.
அதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு ஓமலூரில் உள்ள நடராஜ செட்டியார் திருமண மண்டபத்தில் முதல்- அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கை மனுக்களை முதல்-அமைச்சரிடம் வழங்குகின்றனர்.
இதையடுத்து சமூக நலத்துறை சார்பில் பிற்பகல் 3 மணிக்கு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு திருமண உதவி தொகையுடன் தாலிக்கு தங்கும் வழங்கும் விழா, அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன் வழங்கும் விழா, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story