அமலாக்கத்துறையை கண்டித்து மாநிலம் முழுவதும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறையை கண்டித்து தானேயில் நேற்று நவ்பாடா, மும்ரா, வாக்ளே எஸ்டேட் ஆகிய இடங்களில் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தானே,
சாலையில் பேரணியாக சென்றனர். போலீசார் பேரணிக்கு தடை விதித்தனர். எனினும் அவர்கள் தடையை மீறி செல்ல முயன்றனர்.இதையடுத்து போலீசார் பேரணி சென்ற கட்சி தொண்டர்களை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.
இதில் நவ்பாடாவில் 30 பேரும், மும்ராவில் 25 பேரும், வாக்ளே எஸ்டேட் பகுதியில் 25 பேரும் ஆக மொத்தம் 80 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல மாநிலம் முழுவதும், ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடந்தது. அகமத்நகர், கோலாப்பூர், ஹிங்கோலி, புனே, கட்சிரோலி, ஜல்னா, நாந்தெட், அகோலா, சத்தாரா, சோலாப்பூர் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து போராட்டம் நடத்தினர்.
Related Tags :
Next Story