பண்ருட்டி அருகே, 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் - தொழிலாளிக்கு போலீஸ் வலைவீச்சு
பண்ருட்டி அருகே 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே உள்ள சன்னியாசிபேட்டையை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சேகர், தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்குள்ள காட்டுப்பகுதிக்கு 9 வயதுடைய 2 சிறுமிகள் இயற்கை உபாதை கழிக்க வந்தனர். இதை பார்த்த சேகர், அந்த 2 சிறுமிகளையும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இதுபற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என அந்த 2 சிறுமிகளையும் அவர் மிரட்டியதாக தெரிகிறது. இதில் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளும் தங்களது வீட்டுக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதனர். இதை கேட்டு 2 சிறுமிகளின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் இதுபற்றி பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனஜா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சேகரை வலைவீசி தேடி வருகிறார்.
2 சிறுமிகளை தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story