நிலம் விற்பனை செய்வதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த அண்ணன்-தம்பி கைது


நிலம் விற்பனை செய்வதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த  அண்ணன்-தம்பி கைது
x
தினத்தந்தி 29 Sept 2019 3:45 AM IST (Updated: 28 Sept 2019 10:59 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே நிலம் விற்பனை செய்வதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பொன்னேரியை சேர்ந்த சுப்பிரமணி, பி.என்.கண்டிகையை சேர்ந்த பிரதாப் (வயது 38), அவரது சகோதரர் லோகேஷ் (34) மற்றும் அவர்களது உறவினர் ராமகோவிந்தன் ஆகியோர் பொன்னேரி பகுதியில் தங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் 25 சென்ட் நிலத்தை விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.

இந்த நிலத்தை விற்பதாக கூறி கடந்த 2006-ம் ஆண்டு சென்னை சவுகார்பேட்டை காளத்தி பிள்ளை தெருவை சேர்ந்த ஹரிஹந்கோத்தி என்பவரிடம் ரூ.18 லட்சம் பெற்றனர். பின்னர் கிரைய ஒப்பந்தத்தை ஹரிஹந்கோத்திக்கு தெரியாமல் ரத்து செய்துவிட்டு மோசடி செய்தனர். பின்னர் அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.

இதுகுறித்து ஹரிஹந்கோத்தி திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணப்பன், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் பிரதாப் லோகேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சுப்பிரமணி, ராமகோவிந்தன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story