காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Sep 2019 10:30 PM GMT (Updated: 2019-09-29T00:40:29+05:30)

தஞ்சை ரெயிலடியில் காங்கிரஸ் கட்சியின் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் நேற்றுமாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை ரெயிலடியில் காங்கிரஸ் கட்சியின் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் நேற்றுமாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில துணைத் தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மகேந்திரன், மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மாணிக்தாகூர் ஆகியோரை களங்கப்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் கோவி.மனோகரன், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story