திருவண்ணாமலையில் முட்புதரில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு


திருவண்ணாமலையில் முட்புதரில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு
x
தினத்தந்தி 29 Sept 2019 4:00 AM IST (Updated: 29 Sept 2019 8:43 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் முட்புதரில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருகே உள்ள நார்த்தாம்பூண்டியில் முட்புதரில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று இருந்தது. இதைக்கண்ட அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குழந்தையை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், குழந்தையை வீசியது அந்த பகுதியை சேர்ந்த பெண் என்பது தெரியவந்தது.

மேலும் அந்த பெண்ணுக்கு உடல்நலம் குன்றி காணப்பட்டதால் அவரை அதிகாரிகள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். விசாரணைக்கு பின்னரே எதற்காக அவர் குழந்தையை முட்புதரில் வீசினார் என்பது தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story