வேலூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 300 பணியாளர்கள்
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 300 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் மாநகராட்சி பகுதிகளிலும் டெங்கு கொசு ஒழுப்பு பணி நடைபெற்று வருகிறது.
வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் 60 வார்டுகள் உள்ளன. இந்தப்பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வார்டுக்கு 5 பேர் வீதம் 60 வார்டுகளுக்கு 300 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் வீடு வீடாக சென்று அங்குள்ள குடிநீர் தொட்டி, கழிவுநீர் கால்வாய் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.
இந்த ஆய்வின் போது டெங்கு காய்ச்சலை உருவாக்கக்கூடிய கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட தோட்டப்பாளையம் பகுதியில் சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது 2 தங்கும் விடுதிகளில் கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோன்று பழைய இரும்பு கடைக்கு ரூ.300, 5 வீடுகளுக்கு தலா ரூ.200 என மொத்தம் ரூ.5,300 அபராதம் விதிக்கப்பட்டது. 11 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story