வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் விழிப்புணர்வு அதிகரித்து இருப்பதால் விபத்து உயிரிழப்பு 30 சதவீதம் குறைந்துள்ளது
இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் விழிப்புணர்வு அதிகரித்து இருப்பதால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விபத்து உயிரிழப்பு 30 சதவீதம் குறைந்துள்ளது என்று உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. பிரதீப் பிலிப் தெரிவித்தார்.
கோவை,
பிரண்ட்ஸ் ஆப் போலீஸ், கலாம் மக்கள் அறக்கட்டளை மற்றும் நேரு நகர் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் 26-ம் ஆண்டு விழா, மற்றும் அப்துல்கலாமின் 89-வது பிறந்த நாள் விழாவையொட்டி இலவச ஹெல்மெட் வழங்கி கொண்டாடினர். இதற்கான நிகழ்ச்சி கோவை அவினாசி ரோடு அண்ணா சிலை அருகே நேற்று நடந்தது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.
உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. டாக்டர் பிரதீப் வி.பிலிப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 500 பேருக்கு இலவச ஹெல்மெட்டை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது கூறியதாவது:-
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விபத்து உயிரிழப்பு 30 சதவீதம் குறைந்துள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து தங்களது இன்னுயிரை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
போக்குவரத்து கூடுதல் துணை கமிஷனர் இளங்கோவன்,ணு கோவை மாவட்ட அரிமா கவர்னர் கரணபூபதி, அரிமா ஒருங்கிணைப்பாளர்கள் ராம்குமார், மின்னல் சீனிவாசன், கோவை மாநகர உதவி கமிஷனர்கள் கார்த்திகேயன், சரவணன், ராஜ்கண்ணா, போக்குவரத்து இன்ஸ்பெக்டரகள் சண்முகம், உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிக்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story