கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி


கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 29 Sept 2019 3:30 AM IST (Updated: 29 Sept 2019 8:45 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

ஓட்டப்பிடாரம்,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் 150 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடந்தது.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தங்கமணி தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, முன்னாள் யூனியன் தலைவர் சுகிர்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓட்டப்பிடாரம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா வரவேற்று பேசினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக சண்முகையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, பார்வையிட்டார். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சண்முகையா எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. யூனியன் ஆணையாளர் சுடலை தலைமை தாங்கினார். டாக்டர்கள் அஜய், நஸ்ரின் பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தாய்சேய் நல அலுவலர் ஜெசிமேரி வாழ்த்தி பேசினார். விழாவில் 80 கர்ப்பிணிகளுக்கு அறுசுவை உணவு மற்றும் மங்கள பொருட்கள் வழங்கப்பட்டது.

இதேபோன்று சாத்தான்குளம் தனியார் மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சண்முகபிரியா தலைமை தாங்கினார். விழாவில் 54 கர்ப்பிணி பெண்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கப்பட்டது. டாக்டர் மதியரசி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story