ஆறுகளில் கழிவுகளை கொட்டுவதை தடுக்கவேண்டும் - முன்னாள் எம்.பி. ராமதாஸ் கோரிக்கை
ஆறுகளில் கழிவுகளை கொட்டுவதை தடுக்கவேண்டும் என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் கழிவுநீர் கலந்து மீன்கள் செத்து மிதப்பதாக வந்துள்ள செய்தி வருத்தமளிக்கிறது. இந்த ஆறு நோணாங்குப்பம், அரியாங்குப்பம், ராதாகிருஷ்ணன் நகர், சின்னவீராம்பட்டினம் போன்ற பகுதிகளில் வாழும் உள்நாட்டு மீனவர்களுக்கு காலம் காலமாக மீன்பிடி தொழிலின் ஆதாரமாக விளங்கி வந்தது. இந்த ஆற்றை அரசு சுற்றுலா மையமாக்க படகுகளை செயல்படுத்த முயன்றபோது உள்நாட்டு மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறி எதிர்த்தனர்.
ஆனால் அரசு வேலைவாய்ப்பு அளிக்கும் என்று ஆசைவார்த்தை காட்டி இத்திட்டத்திற்கு அவர்களை சம்மதிக்க வைத்தது. ஆனால் அந்த ஆசை நிராசையானது. பிறகு மீனவர்கள் மாலை 6 மணிக்கு மேல் மீன்பிடித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. ஆனால் நாள் முழுவதும் படகுகள் ஆற்றில் சென்று வந்ததால் மீன்கள் ஓரிடத்தில் தங்காமல் கடலுக்குள் பாய்ந்து ஆற்றில் மீன் உற்பத்தி குறைந்தது.
எனவே 5 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வேலையும் இல்லாமல், ஆற்றின் வாழ்வாதாரமும் இன்றி வறுமையில் வாடி வருகின்றனர். அடிமேல் அடி விழுவதுபோல தற்போது சமூக விரோதிகள் செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டும் தளமாக சுண்ணாம்பாற்றை மாற்றி வருகின்றனர். அதனால் ஆற்றில் இருந்த குறைந்த அளவுள்ள மீன்கள், இறால்கள், நண்டுகள் செத்து கரை ஒதுங்குகின்றன.
இந்த படுபாதக செயலை செய்யும் சமூக விரோதிகளை தடுத்து நிறுத்த அரசின் எந்த துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அரசின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.
இந்த 2 ஆறுகளும் உள்நாட்டு மீனவர்களுக்கு ஆதாரமாக இருந்தன. இச்சமுதாயம் வாழ்வாதாரமின்றி அழிந்து வருவதைப்பற்றி அரசுக்கு கவலை இல்லை. சுண்ணாம்பாற்றில் உள்ள மாங்குரோவ் காடுகளும் அதை சுற்றியுள்ள உயிரினங்களும் அழியும் நிலை உருவாகியுள்ளது. எனவே போர்க்கால நடவடிக்கை எடுத்து கழிவுநீரால் ஏற்பட்டுள்ள நச்சுத்தன்மையை நீக்கி ஆற்றை சுத்தம் செய்யவேண்டும்.
இரவில் காவலர்களை நியமித்து பாதுகாப்பதோடு ஆற்றில் கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும். அரசின் பொதுப்பணி, மீன்வளம், சுற்றுலா, சுற்றுப்புறச்சூழல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், காவல் துறை ஆகிய துறைகள் இணைந்து இப்பிரச்சினையில் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story