படப்பை அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்ற வட மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது
காஞ்சீபுரம் மாவட்டம், படப்பை அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்ற வட மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்தனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள காட்ராம்பாக்கம் உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதியில் திருட்டுத்தனமாக கடைகளில் மது விற்பனை நடைபெறுவதாக சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு சென்று அங்குள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, டெய்லர் கடை ஒன்றில், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தி வந்து பதுக்கி வைக்கப்பட்ட 264 மதுபாட்டில்கள் மற்றும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் 60 மது பாட்டில்கள் என மொத்தம் 324 பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல், அங்குள்ள பான்மசாலா கடையில் பதுக்கி வைத்திருந்த 48 மது பாட்டில்கள் உள்பட மொத்தம் 372 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்ததையடுத்து, கடையின் உரிமையாளர்கள் 2 பேரையும் பிடித்து சோமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து பதுக்கி வைத்து வடமாநில இளைஞர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த டெய்லர் சந்தீப்ஷா (வயது 39), ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாஜிராத்தி (42) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story