கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது
ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் நேற்று முன்தினம் நள்ளிரவு பூண்டி ஏரியை வந்தடைந்தது.
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற 1983-ல் தமிழக அரசு, ஆந்திர அரசுடன் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது. அதன்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம் ஆகும். இதன் காரணமாக ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி., தண்ணீரையும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரையும் வழங்க வேண்டும். கடும் கோடை வெயில் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் வறண்டு காணப்பட்டதால், சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. ரெயில்கள் மூலமாகவும், கல்குவாரிகளில் தேங்கிய நீரையும் சென்னைக்கு கொண்டு சென்று பொதுமக்களுக்கு குடிநீரை அரசு வினியோகம் செய்து வந்தது.
இந்நிலையில் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி, முதல் தவணையாக 8 டி.எம்.சி. தண்ணீர் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடக்கோரி, தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி ஆகியோர் ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை கடந்த மாதம் சந்தித்து முறையிட்டனர். இதனை தொடர்ந்து, அவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப கடந்த 25-ந் தேதி கண்டலேறு நீர் தேக்கத்திலிருந்து திறந்துவிட்டப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிற்க்கு நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு வந்து சேர்ந்தது. இதனை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், பொன்னேரி எம்.எல்.ஏ.பலராமன், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் தண்ணீரை மலர் தூவி வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து, இந்த நீர் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்தடைந்தது. பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடியாகும். 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த நிலையில், நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 22.40 அடியாக பதிவானது. தற்போது ஏரியில் 503 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 100 கனஅடி வீதமும், மழை நீர் 39 கனஅடி வீதமும் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

Related Tags :
Next Story