என்.ஆர்.காங்கிரஸ் கட்சி கட்டுப்பாட்டில் இல்லை: அ.தி.மு.க. ஆட்டுவிக்கும் தலையாட்டி பொம்மை, ரங்கசாமி - முன்னாள் எம்.எல்.ஏ. நேரு பரபரப்பு பேட்டி
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ரங்கசாமியின் கட்டுப்பாட்டில் இல்லை. அ.தி.மு.க. ஆட்டுவிக்கும் தலையாட்டி பொம்மையாக உள்ளார் என்று முன்னாள் எம்.எல்.ஏ. நேரு தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுவை காமராஜ் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்குமாரை வேட்பாளராக அறிவித்தது. அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி விடலாம். எனவே பா.ஜ.க. சார்பில் வேட்பாளரை நிறுத்தலாம் என அந்த கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. ஆர்வம் காட்டினார். தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்று நேர்காணலும் நடத்தப்பட்டது.
ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் திடீரென்று சென்னைக்கு சென்று அ.தி.மு.க. தலைவர்களை ரங்கசாமி சந்தித்து காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட ஆதரவை பெற்று வந்தார். இது பா.ஜ.க. மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
என்.ஆர்.காங்கிரஸ் தனது கட்சி வேட்பாளரை அறிவிக்காமல் இருந்து வந்தநிலையில், அக்கட்சி சார்பில் போட்டியிடுமாறு தெரிவித்து இருப்பதாக கூறி முக்கிய பிரமுகர்களை சந்தித்து முன்னாள் எம்.எல்.ஏ. நேரு ஆதரவு திரட்டினார். கூட்டணி கட்சிகளிடம் தெரிவிக்காமல் இதுபோல் தன்னிச்சையாக ஆதரவு திரட்டுவது கூட்டணி தர்மத்தை மீறிய செயல் என கருத்து தெரிவித்து அ.தி.மு.க.வும் அதிருப்தி வெளியிட்டது.
இந்த விவகாரம் குறித்து நேற்று முன்னாள் எம்.எல்.ஏ. நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் கட்சிக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. முதலில் கட்சி தலைவர் நாம் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்திருந்தார். கட்சியின் பொதுச்செயலாளர் பாலன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து ரங்கசாமி சென்னை சென்று அ.தி.மு.க.வின் ஆதரவை பெற்று வந்தார்.
அதன் பின்னர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என்னை தேர்தலில் போட்டியிடுமாறு வற்புறுத்தினார்கள். நான் அரைகுறை மனதுடன் அதற்கு சம்மதித்தேன். நல்ல நாளில் பணியை தொடங்க வேண்டும் என்பதற்காக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தேன். பின்னர் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசினேன். நாளை(இன்று) வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள். ஆனால் கட்சி தலைமை இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. இது தொடர்பாக தலைவரிடம் கேட்ட போது இன்னும் நேரம் இருக்கிறது என்கிறார். இருப்பினும் என்னை நான் தயார்படுத்திக்கொள்ள சில வேலைகளை செய்தேன்.
இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., வையாபுரி மணிகண்டன் கூட்டணி கட்சிகளை நான் மதிக்காமல் ஓட்டு கேட்பதாக கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டை என்.ஆர்.காங்கிரஸ் தலைமை தட்டிக்கேட்கவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமியின் கட்டுப்பாட்டில் இல்லை. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களால் தான் வழிநடத்தப்படுகிறது. என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் வந்தால் அவர்களை ரங்கசாமி சந்தித்து பேசுவது இல்லை. ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் மணிக்கணக்கில் பேசுகிறார். என்னை குறை கூறும் வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ.வை ஒரு கேள்வி கேட்கிறேன்.
நீங்கள் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட புதுச்சேரி மாநில செயலாளர் புருஷோத்தமனை மதிக்கிறீர்களா? கட்சி தலைமை அலுவலகத்தில் கூட அவரை வைத்து விழா நடத்துவது இல்லை. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு டி.டி.வி. தினகரனை சந்தித்து ஆதாயம் தேடினீர்கள். இப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வருகிறீர்கள்.
அ.தி.மு.க.வை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களிடம், என்.ஆர்.காங்கிரஸ் தலைமை மாட்டிக்கொண்டு முழிக்கிறது. தற்போது நடைபெறும் வேலைகளை எல்லாமல் பார்க்கும் போது காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு கூட்டணி கட்சிகளுக்கு பலிகடா ஆவதை நான் விரும்பவில்லை.
அ.தி.மு.க. ஆட்டுவிக்கும் தலையாட்டி பொம்மையாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இருக்கக் கூடாது. அவரது விருப்பத்தை நிறைவேற்ற எவ்வளவோ பேர் தயாராக உள்ளனர். எனவே ரங்கசாமி தனது செயல்பாட்டை மாற்றிக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீங்கள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை விட்டு விலகுகிறீர்களா? என்று கேட்டதற்கு, ‘இதுகுறித்து எனது ஆதரவாளர்களுடன் கலந்து பேசி கூடிய விரைவில் அறிவிப்பேன்’ என்றார்.
என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டவரே அந்த கட்சி தலைமைக்கு எதிராக குற்றம்சாட்டி பேட்டி அளித்து இருப்பது புதுவை அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story