இதய விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
திருச்சியில் இதய விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
திருச்சி,
திருச்சி காவேரி மருத்துவமனை ஹார்ட் சிட்டி சார்பில் உலக இதய தினத்தையொட்டி ‘இதயத்துக்காக ஓடுவோம்' என்ற தலைப்பில் மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் நடந்தது. திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே இருந்து நேற்று காலை 6 மணிக்கு ஓட்டப்பந்தயம் தொடங்கியது. 5 கிலோ மீட்டர் தூரம் மற்றும் 10 கிலோ மீட்டர் தூரம் என இரு பிரிவுகளாக ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.
இதில் 5 கி.மீ. ஓட்டத்தை மாவட்ட கலெக்டர் சிவராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். 10 கி.மீ. ஓட்டத்தை போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் செங்குட்டுவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பரிசு
இந்த மாரத்தான் ஓட்டம் ரேஸ்கோர்ஸ் சாலை, காஜாமலை மெயின்ரோடு வழியாக சென்று அண்ணா விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. பல்வேறு வயது பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த ஓட்டப்பந்தயத்தில் மாணவ-மாணவிகள், இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, ஆர்வமுடன் ஓடினார்கள். தொடர்ந்து அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Related Tags :
Next Story