மாவட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு - 1,419 பேர் எழுதினர்


மாவட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு - 1,419 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 30 Sept 2019 3:45 AM IST (Updated: 30 Sept 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வை 1,419 பேர் எழுதினர்.

நாமக்கல், 

ஒவ்வொரு ஆண்டும் சென்னை அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் கிராம புறம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பரமத்திவேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி என 4 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வை எழுத மொத்தம் 1,624 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்து இருந்தனர். இவர்களில் 205 பேர் தேர்வு எழுத வரவில்லை. மீதமுள்ள 1,419 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர்.

இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தேடுக்கப்படும் 50 மாணவிகள், 50 மாணவர்கள் என மொத்தம் 100 பேருக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிப்பு உதவித்தொகை ஆண்டுதோறும் ரூ.1,000 வீதம் வழங்கப்படும் எனவும், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த தேர்வில் பங்கேற்க முடியாது எனவும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story