தமிழக போக்குவரத்து கழகத்தில் 660 பயிற்சிப்பணி
தமிழ்நாடு போக்குவரத்து கழக கிளைகளில் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து கழக நிறுவனத்தின் கும்பகோணம், விழுப்புரம், நாகர்கோவில், திருநெல்வேலி கிளைகளில் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 660 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் 218 பேரும், டெக்னீசியன் பிரிவில் 442 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் மற்றும் பி.இ. படித்தவர்கள் இந்த பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள்இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அக்டோபர் 11-ந்தேதிக்குள் http://www.boat-srp.com என்ற தளத்தில் பெயரை பதிவு செய்துகொண்டு, 21-ந் தேதிக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான சான்றிதழ் சரிபார்த்தல் பணி அக்டோபர் 30,31 மற்றும் நவம்பர் 1,2-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இது பற்றிய விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story