நிலக்கரி நிறுவனத்தில் 750 பயிற்சிப் பணிகள்


நிலக்கரி நிறுவனத்தில் 750 பயிற்சிப் பணிகள்
x
தினத்தந்தி 30 Sept 2019 4:24 PM IST (Updated: 30 Sept 2019 4:24 PM IST)
t-max-icont-min-icon

மத்திய நிலக்கரி நிறுவனங்களில் ஒன்று சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட்.

மத்திய இந்திய பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை நிர்வகிக்கும் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் அமைப்பில் தற்போது டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் 750 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியான பணியிட விவரம்: பிட்டர் -250, வெல்டர் -40, எலக்ட்ரீசியன் -360, மெக்கானிக் -45, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராம் அசிஸ்டன்ட் -15, பம்ப் ஆபரேட்டர் கம் மெக்கானிக்- 5, மெஷினிஸ்ட் -20, டர்னர் -15

இந்த பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 15-10-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அக்டோபர் 15-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.

இது பற்றிய விரிவான விவரங்களை http://www.centralcoalfields.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

Next Story