முகத்துவார ஆற்றை சீரமைக்க கோரி மீனவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
முகத்துவார ஆற்றை சீரமைக்க கோரி மீனவர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர், எண்ணூர், கத்திவாக்கம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், காட்டுகுப்பம், முகத்துவார குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் முகத்துவார ஆற்றில் மீன், நண்டு, இறால் பிடிப்பதுடன், முகத்துவாரம் வழியாக கடலில் சென்று மீன் பிடிக்கின்றனர்.
இந்தநிலையில் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். அத்துடன் சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து சுடுநீர் மற்றும் ரசாயன கழிவுகளை முகத்துவாரத்தில் திறந்துவிடுவதால் மீன் வளம், கடல் வளம் பாதிக்கப்படுகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இதையடுத்து முகத்துவார ஆற்றை ஆழப்படுத்தி சீரமைத்து, இருபக்கமும் பாறைகள் அமைத்து படகுகள் செல்ல வழி ஏற்படுத்தவேண்டும். தூண்டில் வளைவு அமைக்கவேண்டும். கடலில் மீன்பிடிக்கும்போது உயிர் இழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
மீன்பிடித்தொழிலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கவேண்டும். கொசஸ்தலை ஆற்றில் தொழிற்சாலைகள் ரசாயன கழிவு, அனல் மின்நிலைய சுடுநீர் மற்றும் சாம்பல் கலப்பதை நிறுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 400-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் தாழங்குப்பம் மார்க்கெட் பகுதியில் நேற்று காலை மீனவர்கள் ஒரு நாள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட மீனவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை எண்ணூர் போலீசார் சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.

Related Tags :
Next Story