தொழில் நஷ்டம் காரணமாக குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த வியாபாரி சாவு
காஞ்சீபுரம் அருகே தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வியாபாரி குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்ததில், பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது மகன் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காஞ்சீபுரம்,
அதன்பின்னர், வீட்டில் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த 2 பேரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு, காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பிறகு மேல்சிகிச்சைக்காக இருவரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி வியாபாரி அகமது பாஷா பரிதாபமாக உயிரிழந்தார். பாரூக் பாஷா ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றி செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காஞ்சீபுரம் அடுத்த அம்பிபுதூர் பகுதியில் வசிப்பவர் அகமது பாஷா (வயது 55). அரிசி வியாபாரம் செய்து வந்தார். இவரது மகன் பாரூக் பாஷா (35). பாரூக் பாஷாவும் தந்தையுடன் வியாபாரத்தில் உதவியாக இருந்து வருகிறார். இந்த நிலையில், அவர்கள் செய்து வந்த அரிசி வியாபாரத்தில் திடீரென்று நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக தந்தை, மகன் இருவரும் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டில் இருந்த 2 பேரும் திடீரென்று குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்தனர்.
அதன்பின்னர், வீட்டில் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த 2 பேரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு, காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பிறகு மேல்சிகிச்சைக்காக இருவரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி வியாபாரி அகமது பாஷா பரிதாபமாக உயிரிழந்தார். பாரூக் பாஷா ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றி செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story