ஓசூரில் தனியார் நிறுவன அதிகாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு


ஓசூரில் தனியார் நிறுவன அதிகாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 1 Oct 2019 3:45 AM IST (Updated: 1 Oct 2019 2:54 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் தனியார் நிறுவன அதிகாரியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஓசூர், 

ஓசூர் சின்ன எலசகிரி ஸ்ரீவாரி நகரை சேர்ந்தவர் வஜ்ரவேல்ராஜா (வயது 41). இவர் பிரபல தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் ஓசூர் சிப்காட் ஸ்ரீ வாரி நகர் சாலை பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர், தான் வைத்திருந்த அரிவாளால் வஜ்ரவேல்ராஜாவை சரமாரியாக வெட்டினார். இதில் வஜ்ரவேல் ராஜாவிற்கு தலை மற்றும் கையில் பலத்த வெட்டுகாயம் ஏற்பட்டது. அவரை வெட்டிய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் துடித்த வஜ்ரவேல் ராஜாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வஜ்ரவேல் ராஜாவை அரிவாளால் வெட்டிய நபர் யார்? எதற்காக அவர் அரிவாளால் வெட்டினார்? என தெரியவில்லை.

இது குறித்து வஜ்ரவேல் ராஜாவின் தாய் ராணி ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிரு‌‌ஷ்ணன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபரை தேடி வருகிறார்.

Next Story