விழிப்புணர்வு ஏற்படுத்த தனி மையம் தொடக்கம்; மதுரையில் 12 பேருக்கு டெங்கு காய்ச்சல்
மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் 12 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தனி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்புடன் 60-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் டெங்குக்கான தனி வார்ட்டில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க பழைய பிரசவ வார்ட்டில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு 50 படுக்கைகள், கொசுவலைகள் உள்ளிட்டவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுபோல், 24 மணி நேரமும் டாக்டர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் காய்ச்சலுடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிய புறநோயாளிகள் பிரிவு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புறநோயாளிகள் பிரிவில் நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுபோல், காய்ச்சல் பாதிப்புடன் வரும் நோயாளிகளுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு வழிமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தனி மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் 2 டாக்டர்கள், உதவியாளர்கள் அடங்கிய குழுவினரும் பணியில் உள்ளனர். இந்த குழுவினர் சிகிச்சைக்காக வருபவர்களிடம் டெங்கு காய்ச்சல் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
இதுகுறித்து பெரிய ஆஸ்பத்திரி டீன் வனிதா கூறும்போது, “மழைக்காலமாக இருப்பதால் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் 12 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொசு வலையுடன் கூடிய படுக்கை வசதிகள் செய்யப்பட்டு சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது.” என்றார்.

Related Tags :
Next Story