கும்பகோணம் அருகே இடப்பிரச்சினையில் தொழிலாளி அடித்துக்கொலை தம்பிக்கு வலைவீச்சு


கும்பகோணம் அருகே இடப்பிரச்சினையில் தொழிலாளி அடித்துக்கொலை தம்பிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Oct 2019 3:45 AM IST (Updated: 1 Oct 2019 2:57 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே இடப்பிரச்சினையில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தம்பியையும் அவரது மனைவியையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சன்னாபுரத்தை சேர்ந்தவர் புகழேந்தி(வயது35). தொழிலாளி. இவருடைய தம்பி மூவேந்தன்(28). இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று புகழேந்திக்கும் அவரது தம்பி மூவேந்தனுக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த மூவேந்தன் மற்றும் அவரது மனைவி அமிர்தவள்ளி ஆகியோர் கட்டையால் புகழேந்தியை தாக்கியதாக தெரிகிறது.

பரிதாப சாவு

இதில் படுகாயமடைந்த புகழேந்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை புகழேந்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவேந்தன் மற்றும் அவரது மனைவி அமிர்தவள்ளியை தேடி வருகிறார்கள். இடப்பிரச்சினையில் தொழிலாளி ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சன்னாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story