என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் ரங்கசாமி


என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் ரங்கசாமி
x
தினத்தந்தி 1 Oct 2019 5:00 AM IST (Updated: 1 Oct 2019 4:47 AM IST)
t-max-icont-min-icon

என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக ரங்கசாமி நேற்று இரவு தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளராக புவனேஸ்வரன் நேற்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி பிரசாரத்தை தொடங்கினார். நேற்று இரவு கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் சாமிபிள்ளை தோட்டம் லெனின் நகரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அந்த பகுதியில் உள்ள வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஜக்கு சின்னத்திற்கு வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது அந்த பகுதி பொதுமக்கள் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். ரங்கசாமியுடன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாலன், எம்.எல்.ஏ.க்கள் டி.பி.ஆர். செல்வம், அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் கணேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சென்றனர்.

Next Story