ஒசஹட்டி உள்பட 9 இடங்களில், ரூ.45½ கோடியில் விளைபொருள் பதப்படுத்தும் மையங்கள் - கலெக்டர் தகவல்
ஒசஹட்டி உள்பட 9 இடங்களில்ரூ.45½ கோடியில் விளைபொருள் பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார். நீலகிரிமாவட்ட கலெக்டர்இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ஊட்டி,
தமிழ்நாடு அரசின் வேளாண் விற்பனை மற்றும்வணிகத்துறைசார்பில் நீலகிரி மாவட்டத்தில் வினியோக தொடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 9 இடங்களில் ரூ.45½கோடி செலவில் விளைபொருள் பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.ஊட்டி தாலுகாவில் ஒசஹட்டி, தாவணெ மற்றும் அணிக்கொரை, குன்னூர் தாலுகாவில் நியூ அல்லஞ்சி, கோத்தகிரி தாலுகாவில் சுள்ளிக்கூடு ஆகிய இடங்களில் கேரட், முள்ளங்கி, பீட்ரூட் போன்ற வேர் காய்கறிகளுக்கான முதன்மை பதப்படுத்தும் மையங்கள் உள்ளன.
கூடலூர் தாலுகாவில் உப்பட்டி, அய்யன்கொல்லி ஆகிய இடங்களில் வாழைக்கான முதன்மை பதப்படுத்தும் மையங்கள் உள்ளன. கோத்தகிரியில் உள்ளநீலகிரி கூட்டுறவுவிற்பனை சங்கவளாகத்தில் சைனீஸ் காய்கறிகளுக்கான முதன்மை பதப்படுத்தும் மையம் இருக்கிறது. ஊட்டிரோஜா பூங்காவளாகத்தில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்டகுளிர் பதன கிடங்குஅமைக்கப்பட்டு உள்ளது.
இந்த முதன்மை பதப்படுத்தும் மையங்கள்ஒப்பந்த புள்ளிஅடிப்படையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி முதல்-அமைச்சரால் பணி ஆணை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் கடந்த மாதம் 25-ந்தேதி வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆணையர் எஸ்.ஜே.சிரு முன்னிலையில் நீலகிரி மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் மற்றும் நீலகிரி உருளைக்கிழங்கு சங்கம், சோலாடாகாய்கறிகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், நீலகிரி உற்பத்தியாளர் நிறுவனம், அகிம்சா ஆர்கானிக் தேயிலை உற்பத்தியாளர் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் ஒசஹட்டியில் உள்ளவேர் காய்கறிகளுக்கான முதன்மை பதப்படுத்தும் மையம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதுவேவினியோக தொடர்மேலாண்மை திட்டத்தின்கீழ் முதல்முறையாக தொடங்கப்பட்ட முதன்மை பதப்படுத்தும் மையம் ஆகும். இத்திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட முதன்மை பதப்படுத்தும் மையங்களில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்களது விளைபொருட்களை பதப்படுத்தி, இடைத்தரகர்கள் இன்றி வேளாண் சந்தையில் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story