கந்தர்வகோட்டை, ஆலங்குடி, ஆவுடையார்கோவிலில் வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்
கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் பணிகளை புறக்கணித்து தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் பணிகளை புறக்கணித்து தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வட்ட தலைவர் செந்தில்குமார், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் வருவாய்த்துறை பணியாளர்களில் 40-க்கும் மேற்பட்ட துணை தாசில்தார் பணியிடங்கள் நிறப்பப்படாமல் காலியாக உள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அந்த பணியிடங்களை முறையாக பதவி மூப்பு அடிப் படையில் நிரப்ப வேண்டும் என்று கோஷமிட்டனர். இதில் வருவாய்த்துறை அலுவலக பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் தங்களது பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் துணை தாசில்தார் ஜபருல்லா, சிறப்பு தனி தாசில்தார் உள்பட 22 பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை ஊழியர் சங்கம் சார்பில், தாசில்தார் ஜெய பாரதி தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.

Related Tags :
Next Story