திருவாரூர் அருகே மரத்தில் வேன் மோதியதில் 6 போலீசார் படுகாயம்


திருவாரூர் அருகே மரத்தில் வேன் மோதியதில் 6 போலீசார் படுகாயம்
x
தினத்தந்தி 2 Oct 2019 4:45 AM IST (Updated: 2 Oct 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே மரத்தில் வேன் மோதியதில் 6 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

திருவாரூர்,

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக நாகை ஆயுதப்படை போலீசார் நேற்று திருச்சியில் இருந்து ஒரு வேனில் புறப்பட்டனர். அந்த வேனில் டிரைவர் உள்பட 6 போலீசார் பயணம் செய்தனர்.

திருவாரூரில் உள்ள மரண பாலம் அருகே வந்தபோது எதிரே வந்த தனியார் பஸ்சின் மீது மோதாமல் இருப்பதற்காக வேனை டிரைவர் திருப்பி உள்ளார். அப்போது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

6 போலீசார் படுகாயம்

இந்த விபத்தின்போது வேனில் இருந்த தினேஷ் குமார், முகமது அசாருதீன், ராஜ்குமார், மகாலிங்கராஜ், மஞ்சுநாத், அசாருதீன் ஆகிய 6 போலீசாரும் படுகாயம் அடைந்தனர் அவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் டிரைவர் தினேஷ்குமார் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story